‘அம்மாவிற்கு அழகான மருமகன் தேவை’: சூட்சுமமாக விளம்பரம் செய்து விபச்சாரத்தில் ஈடுபட்ட யுவதிகள் கைது!

இணையத்தளங்களை பயன்படுத்தி சூட்சுமமாக விளம்பரம் மேற்கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்ட யுவதிகள் மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிலியந்தலை, மொரட்டுவ வீதியில் விடுதியொன்றில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் சூட்சுமமான விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர். எனது அம்மாவிற்கு அழகான மருமகன் தேவை, தனிமையிலுள்ள என்னை அழையுங்கள், காதலிக்க ஒரு துணை தேவை என சமூக ஊடகங்களில் விளம்பங்கள் வெளியிட்டு ஆண்களை கொக்கி போட்டு, விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாடிக்கையாளர் போல சென்ற பொலிசார் அவர்களை கைது செய்தனர்.

25, 28, 32 வயதான பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து மேலும் 9 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

மாத்தறை, வெலிமடை, பண்டாரகம பகுதிகளை சேர்ந்த யுவதிகளே கைதாகினர். கொழும்பில் வேலை செய்வதாக வீடுகளில் கூறிவிட்டு, விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here