49,000 ஐ எட்டுகிறது கொரோனா!

இலங்கையில் நேற்று 569 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 48,949 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 564 பேர், மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். நான்கு பேர் சிறைகளுக்குள் இருந்து அடையாளம் காணப்பட்டனர். ஒருவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்.

மினுவாங்கொட-பேலியகொட கொத்தணி 45,186 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 6,626 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42,091 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here