யாழ்ப்பாண பல்கலைகழக விரிவுரையாளர் ஒருவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.
இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனை முடிவில் அவர் தொற்றிற்குள்ளானது கண்டறியப்பட்டுள்ளது.
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த அவர், பணி நிமித்தம் கொழும்பு சென்று தங்கியிருந்து விட்டு வந்துள்ளார். பின்னர் தென்பட்ட அறிகுறிகளையடுத்து, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்றார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானது.