உடலுறவின் போது 1.5m சமூக இடைவெளி பேணுங்கள்: அதிர வைக்கும் அவுஸ்திரேலிய சுகாதார வழிகாட்டல்!

கொரோனா வைரஸ் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் பாதித்துள்ளது. வெளியில் போகும்போது கொரோனா பரவால் இருக்க மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் எல்லாம் வகுக்கப்பட்டது. இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் தற்போது கொரோனா ஒவ்வொரு தனிமனித வாழ்விற்குள்ளும் வந்து பெட்ரூமிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற அளவிற்கு வந்துவிட்டது.

அவுஸ்திரேலியா நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்நாட்டு தம்பதிகளுக்கு எவ்வாறு கொரோனா பராமல் பாதுகாப்பாக உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை வெளியிட்டுள்ளனர்.

அதன் படி அவர்கள் கொரோனா வைரஸ், விந்தணுக்கள் மூலமாக பரவாது. அதனால் கொரேனா காலத்தில் உடலுறவு தவறில்லை. அதே நேரத்தில் முச்சுகாற்றில் நீர்துகள்கள் மூலமாகவும், எச்சில் மூலமாகவும் பரவலாம் அதனால் தம்பதிகள் உடலுறவின் போது 1.5 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானது மக்கள் பலர் குழப்பத்தில் ஆழந்தனர். இது எப்படி சாத்தியம், சமூக இடைவெளியுடன் உடலுறவுக்கு வாய்ப்பு உள்ளதா என பலர் கேள்விளை எழுப்பினர். இதற்கு அந்நாட்டு வைத்தியர்கள் சிலர் அளித்த விளக்கத்தில் இந்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் தம்பதிகள் சுயஇன்பம் தான் செய்ய வேண்டும் என விளக்கமளித்துள்ளனர்.

மற்றொருவர் உடலுறவின் போது முத்தம் போன் விஷயங்களை தவிர்க்க வேண்டும் என விளக்கமளித்துள்ளார்.

மற்றொருவர் உடலுறவின் போது மூன்றடுக்கு பாதுகாப்பு மாஸ்கை அணிந்து கொள்ள வேண்டும் என விளக்கமளித்துள்ளார். இதில் எதை பின்பற்ற வேண்டும் என அந்நாட்டு மக்கள் குழம்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here