முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் கனமழை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மீண்டும் கன மழை பொழிந்து வருவதோடு காற்றும் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதோடு காற்றும் வீசி வருகின்றது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காலை 11 மணி வரையான தகவல்களின் அடிப்படையில் முத்துஐயன்கட்டு மற்றும் தண்ணிமுறிப்பு பகுதிகளில் 54 மில்லி மீட்டர் அதிகபட்ச மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்நிலையில் தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

இதேவேளை வீசுகின்ற காற்று காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதோடு மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here