சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அரசு வெளியிட்ட எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பிளாஸ் (PLOS) ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “வூஹானில் மார்ச் 2020 முதல் மே 2020 வரை 60,000 பேரின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில் வூஹானில் இருந்து வந்தவர்களில் 1.68 சதவீதம் பேர் கோவிட் -19ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 க்கான ஆன்டிபொடிகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. இது ஹூபே மாகாணத்தைச் சுற்றி சீனாவின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது அதிகம். இதிலிருந்து சீனாவின் வூஹான் நகரில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அரசு வெளியிட்ட எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் என்பது உறுதியாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு விதிகப்பட்டது. ஹூபே மட்டுமல்லாமல் சீனாவின் வடக்குப் பகுதிகளிலும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.