‘இனத்துரோகம் செய்யாதே’: யாழ் பல்கலை துணைவேந்தருக்கு எதிராக கோசம்!

இனத்துரோகம் செய்ய வேண்டாம் என யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சி.சற்குணராஜாவிற்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைகழக வாயிலில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை பாதுகாப்பு தரப்பு நேற்று இரவு பாதுகாப்பு தரப்பு இடித்து அழித்தது.

இந்த பாதகச் செயல் பல்கலைகழக துணைவேந்தர், பதிவாளரின் துணையுடன் நடந்ததாக பல்கலைகழக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் போராட்டக்காரர்கள் துணைவேந்தரிற்கு எதிராக போராட்டக்காரர்கள் கோசமெழுப்பி வருகிறார்கள்.

பல்கலைகழகத்திற்குள் இருக்கும் துணைவேந்தரை வெளியில் வருமாறு போராட்டக்காரர்கள் கோசமெழுப்பி வருகிறார்கள்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, வியத்கம அமைப்பின் சார்பில் யாழில் நடந்த பிரச்சார கூட்டங்களில் தற்போதைய துணைவேந்தர் சிறிசற்குணராசாவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here