சொத்து பிரச்சனையில் வாகனத்தால் மோதப்பட்டு பெண் கொலை!

மத்துகம வெலிமானாவ பகுதியில் இன்று(08) அதிகாலை 1 மணியளவில் 62 வயது பெண் சொகுசு வாகனத்தில் மோதி கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கொலையை செய்த உறவினர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் 37 வயது மகன் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை வீட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அவரது சொத்துகளை பிரித்து கொள்வது தொடர்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

cbi-6295 என்ன வெள்ளை நிற வெகனார் வாகனத்தில் குறித்த சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவித்த அவர், தகவல் அறிந்தவர்கள் 0718591701 என்ற மத்துகம பிரதான பொலிஸ் பரிசோதகரின் தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here