90 இலட்சத்திற்கு கார் வாங்கிய நடிகை!

கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரஷ்மிகா மந்தனா. இவர் சமீபத்தில் 90 லட்சம் மதிப்புள்ள ஒரு புதிய காரை வாங்கி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

ரஷ்மிகா மந்தனா நடிப்பில் கடைசியாக வெளியான தெலுங்குப் படங்கள் அனைத்துமே 100 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்தது. பிரபல நடிகர்களின் படங்களாக இருந்தாலும் ரஸ்மிகா மந்தானா நடிக்கும் படங்களுக்கு தனியாக கூடுதல் வரவேற்பு இருக்கிறது.

கன்னட சினிமாவின் பிரபல நடிகருடன் பிரேக் செய்துகொண்டு தெலுங்கு சினிமாவில் தஞ்சமடைந்த ரஷ்மிகா மந்தனா தற்போது தெலுங்கு சினிமாவில் தேவதையாகவே மாறி விட்டாராம். இளம் ரசிகர்களிடம் அப்படி ஒரு வரவேற்பு இருக்கிறதாம் அம்மணிக்கு.

அந்தவகையில் படத்திற்கு படம் சம்பளமும் புயல் வேகத்தில் உயர்ந்ததுள்ளது. சமீபத்தில்கூட ரஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் அறிமுகமாகும் மிஷன் மஞ்சு என்ற படத்தின் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி விட்டாராம்.

அதன் பலனாக தற்போது ரஷ்மிகா மந்தனாவின் நீண்ட நாள் ஆசையான ரேஞ்ச்ரோவர் எனும் காரை கிட்டத்தட்ட 90 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளாராம். இந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய காருடன் ரஷ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படத்திற்கு இலட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here