நிர்வாண படத்தை வெளியிட்ட நடிகை!

பிரபல நடிகைகளின் நிர்வாணம் மற்றும் அரை நிர்வாணப் புகைப்படங்கள் அவ்வபோது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், இந்த புகைப்படங்களில் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட நடிகை அல்ல, அவரைப் போல் இருக்கும் வேறு ஒரு பெண், என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், சில நடிகைகள் சமூக விழிப்புணர்வுக்காக நிர்வாணமாக போட்டோ ஷூட் எடுத்தும் வருகிறார்கள். நடிகை கஸ்தூரி கூட தாய் பால் குறித்த விழிப்புணர்வுக்காக தனது அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகையான வனிதா கராத்தின் தனது நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘கபிர் சிங்’ திரைப்படத்தில் வீட்டு பணிப்பெண் வேடத்தில் நடித்து பாராட்டு பெற்ற வனிதா காரத், மராத்தி நடிகை ஆவார்.

2021 ஆம் ஆண்டிற்கான காலண்டர் ஒன்றிற்காக தான் வனிதா காராத் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த காலண்டரை தயாரிப்பவர்கள் பாடி பாசிட்டிவிட்டி என்ற சமூக இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர். உடல் பருமனாக இருப்பவர்களுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பாடி பாசிட்டிவ் சமூக இயக்கத்துடன் இணைந்து ஆடை எதுவுமின்றி நிர்வாணமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வனிதா காரத் பகிர்ந்துள்ளார்.

வனிதா காரத்தின் இந்த துணிச்சலான முயற்சிக்கு ரசிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here