கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர், இந்த விஷயத்தை ஆராயும் நிபுணர் குழு கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய மட்டுமே பரிந்துரைத்துள்ளது.
எனவே சமூக, மத, அரசியல் அல்லது தனிப்பட்ட காரணங்களால் இந்த முடிவை அரசாங்கம் மாற்றிக் கொள்ளாது என்று அமைச்சர் கூறினார்.
நிபுணர் குழுவின் பரிந்துரைகள் தெளிவானவை என்று அமைச்சர் வன்னியராச்சி கூறியதுடன், முடிவில் திருத்தம் செய்ய முடியாது என்றும் கூறினார்.