மானிடத்தின் வட மாகாண இயற்கை வழி வீட்டுத்தோட்ட குழு நிலைப் போட்டி -2021

நீங்கள் ஒரு இயற்கை ஆர்வலரா சமூக மாற்றத்தை விரும்புவரா அவ்வாறு எனில் 10 பேர் கொண்ட குழுவை / குழுக்களை இயற்கை விவசாய வீட்டுத் தோட்டப் போட்டியில் தன்னார்வலராக வழிநடத்தி பங்கேற்கலாம் .

அகில இலங்கை சைவ மகா சபையும் தெல்லிப்பளை மானிடம் இயற்கை வேளாண் பண்ணையும் இணைந்து நடாத்தும் இப்போட்டியில் முதலிடம் பெறும் குழுவில் மிகச் சிறப்பான பெறுபேற்றை காட்டும் குடும்பத்துக்கு கறவைப்பசு பரிசாக வழங்கப்படும்.

நிபந்தனைகள்
1 .குழு உறுப்பினர்கள் 10 பேரும் ஒரே கிராம அலுவலர் பிரிவில் வசிக்க வேண்டும். வழி நடத்தும் தன்னார்வலர் / அலுவலர் அங்கு வசிக்க வேண்டிய தேவை இல்லை

2. ஒருவர் அதிக பட்சம் 5 குழுக்களையே வழி நடத்த முடியும்.

3. இரு வாரங்களுக்கு ஒரு தடவை Viber / whatsapp இலக்கத்துக்கு முன்னேற்றம் தொடர்பான படங்கள் அனுப்பட வேண்டும்.

4. இயற்கை இடு பொருட்கள் தவிர்ந்த வேறு எந்த இடுபொருளும் பாவிக்கக் கூடாது.

5. 2021 இற்கு பின்னர் நடுகை செய்த / விதைகள் இட்ட மரக்கறி / பழ மர/ மூலிகைப் பயிர்கள் மட்டும் போட்டியில் கருத்திற் கொள்ளப்படும்.

சிறப்பு உதவிகள்
1 . இயற்கை வழி விவசாய தொழில்நுட்ப ஆலோசனை இலவசமாக வழங்கப்படும்.

2. இயற்கை வழி இடுபொருட்கள், பூச்சி விரட்டிகளை மானிய விலையில் தெல்லிப்பளை வைத்தியசாலை அருகிலுள்ள மானிடம் பண்ணையில் பெற்றுக் கொள்ளலாம்.

3 . குழுவிலுள்ள விசேட தேவைப்பாடுடைய குடும்பங்களிற்கு இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.

போட்டி கால எல்லை
தை – சித்திரை

விண்ணப்ப முடிவு திகதி
தைப்பொங்கல்

பரிசு வழங்கல் சித்திரை வருடப்பிறப்பு

விண்ணப்பங்கள்
குழுவிலுள்ள 10 குடும்பங்களினதும் தலைவர் / தலைவியின் முழுப்பெயர்கள், தொடர்பு இலக்கங்கள், முகவரிகள் மற்றும்

குழுவின் பெயர், (தமிழ் பெயராக இருத்தல் வேண்டும்) கிராம சேவையாளர் பிரிவு,
வழி நடத்தும் தன்னார்வலர், Viber இலக்கம் என்பன அடங்கிய விபரக்கோவை

இவற்றினை கீழ்காணும் Viber இலக்கத்திற்கு 14 | 01 | 2021 முன்னர் அனுப்பவும்

அனுப்ப வேண்டிய Viber இலக்கம்
070 2373901

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here