தரம் 1 மாணவர்கள் பெப்ரவரி 2வது வாரத்தில் பாடசாலைகளில் இணைக்கப்படுவர்!

2021 ஆம் ஆண்டிற்கான தரம் 1 மாணவர்கள் பெப்ரவரி இரண்டாவது வாரத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் கலாநிதி கபில பெரேரா இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, மேற்கு மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளில், தரம் 2 முதல் 13 வரையிலான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 11ஆம் திகதி ஆரம்பிக்கிறது.

தரம் 1 மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பெப்ரவரி இரண்டாவது வாரத்தில் தொடங்கும்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண, வலய கல்வி பணிப்பாளர்களிற்கு அனுப்பி வைத்துள்ளார். வழிகாட்டுதல்கள் தொடர்பாக நாளை ஊழியர்களுடன் கலந்துரையாடுமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

நெறிமுறையைத் திருத்துவது குறித்த அவர்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் பெற ஒரு வரையறுக்கப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பெற்றோர்கள் கோரப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

நாளை முதல் ஜனவரி 9 வரை இந்த கூட்டங்கள் நடத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here