வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் இன்று நான்கு பேருக்கு கொரோனா

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று செவ்வாய்கிழமை 321 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைககளும் மற்றும் 206 அன்டிஜன் பரிசோதனைகள் இடம் பெற்றதில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்றுக்குள்ளான வியாபாரிகள் வியாபார நடவடிக்கையினை மேற்கொண்டு வந்த ஓட்டமாவடி பிரதான வீதியிலுள்ள வியாபார நிலையம் மற்றும் வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள வியாபார நிலையம் என்பவற்றின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் இடம்பெற்றது.

இந்த வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வியாபாரிகள் 96 நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை இடம்பெற்றதில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை.

அத்தோடு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வியாபாரிகள் 100 நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை இடம்பெற்றதில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் ஆறு பேருக்கு அன்டிஜன் பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here