இந்திய வெளிவிவகார அமைச்சர் சு.ஜெய்சங்கர் இன்று மாலை இலங்கையை வந்தடைந்தார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், எதிர்வரும் 8ஆம் திகதி நாடு திரும்புகிறார்.
இந்த விஜயத்தின் பேதுாது ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
சி.ஜெய்சங்கருடனான சந்திப்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இதற்காக அவர்கள் தற்போது கொழும்பில் தங்கியுள்ளனர்.