நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் தொற்று நீக்கல்

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் திங்கட்கிழமை (4) 97 துரித அன்ரிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 4 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் அலுவலக பிரிவுகளில் தொற்று நீக்கும் மருந்து தெளிக்கும் செயற்பாட்டினை நாவிதன்வெளி பிரதேச சபை இன்று(5) முன்னெடுத்துள்ளது.

கொரோனா அனர்த்தம் மீள பரவ ஆரம்பித்துள்ள நிலையில் அதிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக இன்று(05) முற்பகல் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் அமரதாஸ ஆனந்த ஆலோசனையில் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது பிரதேச செயலகத்தின் வாகன தரிப்பிடங்கள் மோட்டார் சைக்கிள்கள் வாகனங்கள் சமூர்த்தி பிரிவு காணி பிரிவு கணக்காளர் பிரிவு மேலதிக மாவட்ட பதிவாளர் பிரிவு உள்ளிட்ட பகுதிகள் மலசலகூடங்கள் மருந்துகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here