கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பூசிகளை பெற அமைச்சரவை அங்கீகாரம்!

கோவெக்ஸ் திட்டத்தின் COVID-19 தடுப்பூசிகளைப் பெறுவதற்கான உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கோவெக்ஸ் திட்டம் என்பது எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட COVID-19 தடுப்பூசிகளின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக அரசாங்கங்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடையே தொடங்கப்பட்ட ஒரு உலகளாவிய திட்டமாகும்.

இலங்கை ஏற்கனவே கோவக்ஸ் திட்டம் மற்றும் தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணியுடன் இணைந்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் கோவிட் 19 தடுப்பூசிகளைப் பெற இலங்கை தகுதியுடையது என்பதையும் உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.

சேமிப்பு திறன் மற்றும் COVID-19 தடுப்பூசி செயல்முறை தொடர்பான தொழில்நுட்ப தகவல்கள் விபரிப்புக்களுடன் தடுப்பூசிகளைப் பெறுவதற்கான ஆரம்ப விண்ணப்பத்தை அரசாங்கம் சமர்ப்பித்ததாக சுகாதார அமைச்சர் தனது அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த செயல்முறையின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை இப்போது ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன் ஒரு ஒப்பந்தத்தில் இணைய வேண்டும்.

அதன்படி, வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி தடுப்பூசி விண்ணப்பத்தின் இரண்டாம் பகுதியை சமர்ப்பிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சட்டமா அதிபர் மற்றும் கோவெக்ஸ் திட்டம் மூலம் தடுப்பூசிகளை ஒதுக்கும்போது ஒரு உற்பத்தியாளருடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here