யாழில் பிரதேச செயலக உத்தியோகத்தருக்கு தொற்று செய்தி உண்மையா?

நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. எனினும், அது தவறானது.

நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தரிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் அவருக்கு தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அவரது கணவன் மற்றும் மகள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பிரதேச செயலக உத்தியோகத்தருக்கு தொற்று இல்லையென்பதால், பிரதேச செயலகத்தின் ஏனைய உத்தயோகத்தர்களிற்கு எந்த நெருக்கடியும் இல்லை.

சில சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட தகவல் தவறானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here