வடக்கில் இன்று 7 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும், வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் நெருங்கிய உறவினரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.