இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலிக்கு கொரோனா!

இலங்கை வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலி கொரொனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் இந்த முடிவு தெரிய வந்துள்ளது.

33 வயதான மொயின் அலி, அரசாங்கத்தின் தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறையின்படி 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்.

அணியின் சக வீரர்ர் கிறிஸ் வோக்ஸ் அவருடன் நெருக்கமான தொடர்பை கொண்டிருந்ததால், அவர் சுய தனிமைப்படுத்தப்படுகிறார்.

இங்கிலாந்து வீரர்கள் நாளை மீளவும் பிசிஆர் சோதனைக்கு உள்ளாக்கப்படுவர்.

இலங்கையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்து ஆடவுள்ளது. ஜனவரி 14 ஆம் திகதி முதல் போட்டி காலியில் தொடங்குகிறது. மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் அயர்லாந்துக்கு எதிரான தொடர்களை இங்கிலாந்து இழந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதலாவது கிரிக்கெட் தொடரை ஆட இலங்கைக்கு வந்துளள் இங்கிலாந்து அணியில் மொயின் அலி முதலாவது தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here