மணிவண்ணன், சீ.வீ.கே, இந்திய தூதரக அதிகாரி: நடந்தது இதுதான்!

யாழ் மாநகரசபையின் முதல்வர் வி.மணிவண்ணனும், வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானமும், இந்திய துணைத்தூதரகஅதிகாரி உட்கார்ந்து பேசுவதை போன்ற ஒரு புகைப்படம் இன்று சமூக ஊடகங்களில் பரவியது.

இந்த படத்தை ஒவ்வொரு அரசியல் சார்பானவர்களும் அவரவர் விருப்பப்படி கற்பனை செய்து, எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் அரசு கட்சிக்குள் உருவாகியுள்ள “குழப்படி அணி“ அந்த படத்தில் சீ.வீ.கே.சிவஞானமும், மணிவண்ணனும் ஒன்றாக இருக்கிறார்கள் என அலப்பறை பண்ணினார்கள். மணிவண்ணன் முதல்வராகியதில் சுமந்திரனின் மறைகரங்கள் பற்றிய தகவல் வெளியானதால், அவர்கள் தாம் எதிரியாக கருதும் சீ.வீ.கே.சிவஞானத்தை தாக்க ஒரு அஸ்திரமாக இதை எடுத்தனர். சீ.வீ.கே- மணி கூட்டு என அடித்து விட்டார்கள்.

அதேபோல மணிவண்ணன் எதிரிகளும் அதை பாவித்தனர். மணிவண்ணன் ஆதரவாளர்களும் அதை பாவித்து- மணிவண்ணன்- இந்திய துணைதூதர் சந்திப்பு என பில்டப் செய்தார்கள்.

யாரோ ஒரு ஆர்வக்கோளாறு, அதை பெரிய செய்தியாக்கி, “இதில் பேசப்பட்ட விடயங்கள் வெளியில் வரவில்லை“ என்றும் முடித்திருந்தார்.

ஆனால், உண்மையில் அப்படியெதுவுமே நடக்கவில்லை.

வடக்கு ஆளுனர் அலுவலகத்தில் புதுவருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதன்போது, 5 மாவட்ட அரச அதிபர்கள், 5 மாவட்ட கட்டளை தளபதிகள், முக்கிய அரச நிறுவனங்கள், யாழ் மாநகரசபை முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்படியான நிகழ்விற்கு செல்பவர்கள்- பேஸ்புக்கில் நடப்பதை போல கட்சி பிரித்து உட்கார்வில்லை.

அப்படித்தான் இன்றைய நிகழ்விற்கு சென்ற வடக்கு அவை்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், இந்திய தூதரக இரண்டாம் நிலை அதிகாரி, யாழ் முதல்வர் மணிவண்ணன் ஆகியோர் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தனர்.

அவர்கள் மிகச் சிறியளவில் சம்பிரதாயமாகவே பேசினார்கள்.

சம்பிரதாய நிகழ்வில், சம்பிரதாயமாக பேசினார்கள் அவ்வளவுதான்.

அதாவது மேலேயுள்ள இரண்டு படங்கள் சொல்லும் செய்திதான் அது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here