மட்டக்களப்பு நகர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நொச்சிமுனை, நாவற்குடா, வேலூர், கல்லடி உட்பட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், வீதிகளில் நீர்கள் செறிந்து காணப்படுகின்றது.

இதனால் பலர் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதுடன், சிலர் தங்களது வீடுகளில் வெள்ள நீருக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றது.

குறித்த பகுதிகளில் பல நாட்களாகவும் வெள்ள நீர் காணப்பட்ட நிலையில் தற்போது தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக மேலும் வெள்ள நீர் அதிகரித்து காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here