நேற்று 20 மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

நாட்டில் நேற்று 20 மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் நேற்று 403 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனவர். அவர்களில் 81 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

கண்டி மாவட்டத்தில் இருந்து 56 பேரும், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 30 பேர், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 27 பேர், திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 20 பேர், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 18 பேர், அம்பாரை மற்றும் கேகாலை மாவட்டங்களில் இருந்து தலா 17 பேர், குருநாகல் மற்றும் இரத்னபுரி மாவட்டங்களில் இருந்து தலா 14 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 6 பேர், காலி மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து தலா 4 பேர், மாத்தறை மாவட்டத்தில் இருந்து 3 பேர், மாத்தளை மாவட்டத்தில் இருந்து 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புத்தளம், ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அனுராதபுரம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தலா ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் கொழும்பு மாவட்டத்தில் இருந்து 18,686 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் இருந்து 9,648 பேரும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 3,545 பேரும், கண்டி மாவட்டத்தில் இருந்து 1,887 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here