ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான ஆலோசனை குழு என்ற பெயரில் அண்மையில் சில தரப்புக்கள் கிளிநொச்சியில் கூடி ஒரு அமைப்பை உருவாக்கியிருந்தன.
இந்த குழு இன்று மதியம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் கலந்துரையாடல் ஒன்றை
முன்னெடுத்துள்ளது.
குறித்த கலந்துரையாடலில் குறிப்பிட்ட சில தரப்புக்களே கலந்துகொண்டுள்ளன. ஜெனிவா கூட்டத்தொடரில் முன்வைக்கவேண்டிய விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக ஆராயப்பட்டிருந்தது.
இதில் தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் எஸ்.சிவகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்தி்குமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் மாகாண உறுப்பினர் ப.சத்தியலிங்கம், எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் மற்றும் சிலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த குழுவில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் பங்கேற்கிறார்கள். கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மற்றும் இதர தமிழ் கட்சிகள் சார்பில் யாரும் அழைக்கப்படவில்லை.