ஒஸ்திரியாவில் மலை உச்சிக்கு சென்று காதல் நிச்சயதார்த்தம் செய்த போது, காதலி 600 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது.
கரிந்தியாவில் 27 வயதான நபரும், 32 வயதான பெண்ணும் மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த குன்றின் உச்சியில் நின்று அந்த நபர், தனது காதலை நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.
காதலை ஏற்றுக்கொண்ட சில நிமிடங்களிலேயே அந்த பெண் எதிர்பாராதவிதமாக 600 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். அதிர்ச்சியடைந்த காதலனும், காதலியை காப்பாற்ற பள்ளத்தில் குதித்துள்ளார்.
வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்துவதாக நினைத்த இருவரும் தற்போது காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.