கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் அஸ்மி கடமையை பொறுப்பேற்றார்

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் அஸ்மி கடமையை பொறுப்பேற்றார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனின் பணிப்புரைக்கமைய கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
 
2021.01.01 முதல் செயற்படும் வண்ணம் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வைத்திய பொது சேவையில் 20வருட காலத்தை நிறைவு செய்துள்ள வைத்தியர் ஏ.ஆர்.எம்.அஸ்மி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் மருதமுனை மாவட்ட வைத்தியசாலை உள்ளிட்டவைகளில் பணியாற்றியதுடன் மருதமுனை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியராகவும் இரண்டு வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
 
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர் ஏ.ஆர்.எம்.அஸ்மி மருதமுனை கொரோனா சிகிச்சை நிலையத்தின் பணிகளையும் தொடர்ந்து முன்னெடுக்க பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
 
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய றிஸ்னி முத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
அதன் அடிப்படையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக ஏ.ஆர்.எம்.அஸ்மி தனது கடமைகளை இன்று (02) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் மேற்பார்வை பொது சுகாதார உத்தியோகத்தர் ஏ.எம்.பாறூக், பொதுச் சுகாதார பரிசோதகர்களான அப்பாஸ் எம்.நியாஸ், ஜே.எம்.நிஜாமுத்தீன், ஜ.எல்.எம்.இத்ரிஸ், எம்.ரவிச் சந்திரன், எம்.ஜுனைத்தீன், பொதுச் சுகாதார தாதிய உத்தியோகத்தர் எச்.ஏ.சி.பெரேரா, மேற்பார்வை மருத்துவ மாது உத்தியோகத்தர்
எம்.எச்.யூ.சல்மா, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.ஏ.ஹாறூன், நிகழ்ச்சி திட்டமிடல் உத்தியோகத்தர் சகுந்தலா, சுகாதார உதவியாளர் ஏ.சேக் அப்துல்லாஹ் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here