ரஷ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசியான ஸ்புட்னிக் -5 ஐ பெறுவது தொடர்பாக சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் ரஷ்ய அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடந்துள்ளது.
சுகாதார அமைச்சின் அதிகாரிகள், ரஷ்ய சுகாதார அமைச்சு, ரஷ்யாவின் தொற்றுநோயியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஸ்புட்னிக் -5 தடுப்பூசி உற்பத்தியாளர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தடுப்பூசி 91.4% பயனுள்ளதாக இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உற்பத்தியாளரின் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மற்றும் தடுப்பூசி தொடர்பான ஒப்புதல் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சோதனைகள் தொடர்பான அனைத்து அறிவியல் தரவுகளையும் பரிமாறிக் கொள்ள ரஷ்ய அதிகாரிகள் விருப்பம் தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில் தடுப்பூசிகளைப் பெறுவது குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.