மூத்தோர் ஆசீர்வாதத்துடன் புதிய ஆண்டின் பணிகளை ஆரம்பித்த பச்சிலைப்பள்ளி பிரதேச சபை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வேலைத்திட்டங்கள் இன்று காலை பத்து மணிக்கு மூத்தோர் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமாகியது என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.

இன்று பச்சிலைபள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் இனங்காணப்பட்ட தேவையுடைய முதியவர்கள் 180 பேருக்கு புத்தாடைகள் மற்றும் அவசிய தேவை உடைகள் வழங்கிவைக்கப்பட்டது.

இது தொடர்பாக கருத்துரைத்த தவிசாளர் 2021 ம் ஆண்டுக்கான சபையின் முதலாவது செயற்றிட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சபையின் உப தவிசாளர் முத்துக்குமார் கஜன் உறுப்பினர்கள் ரமேஷ், வீரவாகுதேவர், நகுலேஸ்வரன் சபையின் செயலாளர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

flashsgl

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here