சிலாபம், முன்னேஸ்வரத்தில் உள்ள காளி கோவிலில் இருந்து காளி சிலை திருடப்பட்டுள்ளது.
கோயிலின் பராமரிப்பாளர் எனக் கூறும் ஒரு பெண் சிலாபம் பொலிசில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.
கோவிலில் சிலை வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்து காளியின் சிலை காணவில்லை என்றும், அது யாராலோ திருடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவர் பொலிசாருக்கு தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த சிலை பக்தர்களால் விசேடமாக வழிபடப்பட்டதாக அவர் தெரவித்துள்ளார்.
சிலாபம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.