அரச தகவல் திணைக்கள அறிக்கையில் திருத்தம் காத்தான்குடி பி.செ பிரிவே தனிமை!

இன்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள காத்தான்குடி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி பிழையானதாகும்.

காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவு என்பதே சரி என காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவு என்பது ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவையும் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவின் ஒரு பகுதியையும் உள்ளடக்குகின்றது.

தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருப்பது காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவின் 18 கிராம சேவகர் பிரிவுகள் மாத்திரமே என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here