மன்னார் மறை மாவட்ட ஆயர் தலைமையில் விசேட புத்தாண்டு திருப்பலி

புத்தாண்டு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (1) காலை 6 மணியளவில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

சுகாதார நடை முறைகளை பின்பற்றி முககவசங்கள் அணிந்த வண்ணம் ஒரு தொகுதி கிறிஸ்தவ மக்கள் திருப்பலியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இன்றைய தினம் காலை 6 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருகள் இணைந்து திருவிழா திருப்பலினை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

திருப்பலியின் போது ஆலயத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுப்பை வழங்பினர்.அதே நேரத்தில் மக்களின் ஆன்மிக நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பங்குகளிலும் குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட அளவு மக்களின் பங்கு பற்றுதலுடன் திருப்பலிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் நள்ளிரவு திருப்பலி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here