வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
வடக்கு மாகாண  சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ணவின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சத்தியபிரமாணமும் எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளை பெற்று வடக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்த யாழ் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின்
மாணவி  சுபாஷ்கரன் யனுஷ்காவிற்கு  பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here