இணைப் பறவை இறந்த துக்கம் தாளாமல் அதன் உடலருகே அமர்ந்திருந்த அன்னப் பறவையால 23 ரயில்கள் பயணத்தைத் தொடர முடியாமல் காத்திருக்க வேண்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஜெர்மனியின் கேசல், கோட்டிங்கன் நகரங்களுக்கிடையேயான அதிவேக ரயில் தடத்துக்கு அருகில் இரு அன்னப் பறவைகள் சுற்றித் திரிந்ததாக கேசல் நகர பொலிசார் தெரிவித்தனர்.
அவற்றில் ஒன்று மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்தது. இறந்துபோன பறவையின் உடலுக்கருகில் அமர்ந்த அதன் இணை அவ்விடத்தை விட்டு நகரவில்லை.
அதனால் அந்தத் தடத்தில் செல்ல வேண்டிய 23 ரயில்கள் தங்களது பயணத்தை ஒத்தி வைத்துக் காத்திருந்தன.
தீயணைப்புப் படையினர் சிறப்பு உபகரணங்களைக் கொண்டு உயிருடனிருந்த அன்னப் பறவையை அவ்விடத்தில் இருந்து அகற்றினர். பத்திரமாக மீட்கப்பட்ட அது, பின்னர் ஃபுல்டா நதியில் விடப்பட்டது.
சுமார் 50 நிமிட தாமதத்துக்குப் பிறகு ரயில்கள் அந்தத் தடத்தில் பயணத்தைத் தொடர்ந்தன.
கடந்த 23ஆம் திகதி நிகழ்ந்த இந்தச் சம்பவம் நடைபெற்றது.
பொதுவாக, அன்னப் பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடன் தான் வாழும் என பிரிட்டனின் ரோயல் சொசைட்டி பறவைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது.