கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தாதிக்கு கொரோனா!

அமெரிக்காவின், கலிபோர்னியாவில் தாதி ஒருவருக்குக் கடந்த வாரம் பைசர் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இந்நிலையில், அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

45 வயதான தாதி ஒருவருக்குக் கடந்த வாரம் பைசர் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இந்த நிலையில் அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை.

இந்த நிகழ்வு எதிர்பாராத ஒன்று என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பு மருந்தை மக்களிடம் சென்றடையும் முயற்சியில் தீவிரமாக இருக்க வேண்டும். அதிகமான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் என்று ஜோ பைடன் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி நியூயோர்க் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய தாதிக்கு முதன்முதலாகக் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

மேலும், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்கத் தலைவர்கள் பலரும் கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here