கல்முனையில் முடக்கப்பட்ட பகுதியில் ஏற்பட்ட பதற்றம் முடிவுக்கு வந்தது!

கல்முனை நகரம் உள்ளிட்ட சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டிருப்பதனால் ஏனைய இடங்களுக்கான மாற்று வீதியில் பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டது.

இன்று (30) மதியம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்ப்பட்ட சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அயல் ஊர்களான சாய்ந்தமருது மாளிகைக்காடு நற்பிட்டிமுனை மருதமுனை பகுதியில் இருந்து வருகை தருகின்ற மக்கள் மாற்று வீதியாக கிட்டங்கி வீதியை இணைக்கின்ற குளக்கட்டு ஒன்றினை பொதுப்போக்குவரத்திற்காக பாவித்து வந்தனர்.

இந்நிலையில் இவ்வாறு பொதுப்போக்குவரத்தினால் வீதியில் இரு மருங்கிலும் இடநெருக்கடி ஏற்பட்டதுடன் வீதியின் அருகில் உள்ள வீட்டுச்சுவர்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்து சிலரால் குறித்த வீதி இடை மறிக்கப்பட்டு முள்வேலி இடப்பட்டிருந்தது.

இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு கல்முனை போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி நிஹால் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், கே.செல்வராசா, வ.சந்திரன் ஆகியோர் இணைந்து சமரச முயற்சியினை ஏற்படுத்தினர்.

குறித்த தனிமைப்படுத்தல் சட்டத்தினால் பொது போக்குவரத்து சேவைகள் செயலிழந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை தெற்குப் பிரதேசத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதையடுத்து, கல்முனை செய்லான் வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரையான 11 கிராம சேவகர் பிரிவுகள் திங்கட்கிழமை (28) இரவு முதல் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்இ இப்பகுதியினுள் கல்முனை பிரதான பஸ் நிலையம் அமைந்திருப்பதனால் அங்கு பஸ்கள் வந்து செல்வது முற்றாக தடைப்பட்டுஇ அப்பகுதி வெறிச்சோடிக்காணப்படுகின்றது.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here