கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று
கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம்
இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.

மாதாந்தம் 30ம் திகதி வடக்கு கிழக்கு பகுதிகளில் 30ம் திகதி
இடம்பெற்றுவரும் குறித்த போராட்டம் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களையும்,
வாசகங்களையும் ஏந்தியவாறு ஏ9 வீதியில் கவன ஈர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்புாது ஊடகங்களிற்க கருத்து தெரிவித்த வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,
தமது பிள்ளைகளின் நிலை தொடர்பில் சர்வதேசமே தீர்வை பெற்று தர வேண்டும் என வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here