புதிய ஆண்டில் நாடாளுமன்றம் ஜனவரி 5 ஆம் திகதி கூட்டப்படும் என்று நாடாளுமன்ற நடவடிக்கைக் குழு முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற அமர்வு 5 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை இடம்பெறும்.
வரவு செலவு திட்ட அமர்வின் போது செய்தியாளர்களிற்கான அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது. 5ஆம் திகதி முதல் செய்தியாளர்களிற்கு அனுமதிக்கப்படும்.
நாடாளுமன்ற நடவடிக்கைக் குழுவில் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஒரு ஊடக நிறுவனம் சார்பில் இரண்டு பத்திரிகையாளர்கள் மட்டுமே நுழைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.