முள்ளியவளையில் பாழடைந்த கிணற்றில் மனித உடல் பாகங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் மரியாம்பிள்ளை என்பவருடைய தோட்டத்தில் கிடக்கின்ற மண்கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு கால்நடைகளை பார்வையிடுவதற்காக வந்த பெண் ஒருவர்  உடற்பாகங்கள் இருப்பதை அவதானித்து அந்த பகுதி கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அங்கு சென்ற கிராம அலுவலர் உடல் பாகங்கள் இருப்பதை பார்வையிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்

பொலிசார் அங்கு சென்று உடலத்தை பார்வையிட்டனர். அங்கு சிவிலுடையில் பொலிசார் காணப்படுகிறார்கள். யாரும் சீருடையில் இருக்கவில்லை.

சிவில் உடையில் இருக்கின்ற – பொலிசார் என தம்மை அடையாளப்படுத்திய நபர்கள் உடலம் இருக்கின்ற பகுதியை புகைப்படம் எடுப்பதற்கும் ஊடகவியலாளர்களுக்கும் தடை விதித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here