அருவி ஆற்றில் நீராட சென்ற தோமஸ்புரி கிராம சேவகர் மாயம்

மன்னார் -நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தோமஸ்புரி கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவகர் ஒருவர் ஆற்றில் நீராட சென்ற நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை காணாமல் போயுள்ளார்.

மன்னார் அரிப்பு பாலப்பகுதியின் கீழ் அருவி ஆற்றில் நீராட சென்ற ஐந்து கிராம சேவகர்கள் உற்பட 6 பேர் நீராடியுள்ளனர்.

இதன் போது அதிக நீர் வரத்து காரணமாக கிராம அலுவலர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

விடயம் அறிந்த மக்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடுதல் மேற்கொண்ட நிலையில் நான்கு கிராம சேவகர் உட்பட ஐவர் மீட்கப்பட்டனர்.

எனினும் தோம்ஸ்புரி பகுதியில் கடமையாற்றும் கிராம சேவையாளர் இது வரை மீட்கப்படாத நிலையில் அவரை தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் மற்றும் பொது மக்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here