மவனெல்ல, ஹிகுல பகுதியில் உள்ள புத்தர் சிலை மீண்டும் ஒரு முறை தாக்கப்பட்டுள்ளது.
சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடி அறை மீது நேற்றிரவு (28) ஒரு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்பாக 2018 டிசம்பரில் இந்த புத்தர் சிலை, சஹ்ரான் குழுவால் தாக்கப்பட்டது.