தம்மிக்க பண்டாரவின் பாணி குடித்த 5 பேருக்கு கொரோனா!

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய தம்மிக்க பண்டாரவின் பாணி மருந்தை குடித்த ஐந்து பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் இரண்டு பேர் பாணி மருந்தை வாங்க சென்றதால் தொற்றிற்குள்ளாகியிருக்கலாமென கருதப்படுகிறது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்ஜே இதனை தெரிவித்துள்ளார்.

வரக்காபொலவை சேர்ந்த பெண், அவரது 5 வயது குழந்தையும் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இவர்களும் பாணி மருந்தை பெற்று, அருந்தியுள்ளனர்.

தவறான தகவல்களின் அடிப்படையில் இதுபோன்ற இடங்களில் நீண்ட வரிசையில் நிற்பது, வரிசையில் நிற்பவர்களை மாத்திரமல்லாது, அந்த பிரதேச மக்களையும் ஆபத்திற்குள்ளாக்கும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here