போதைப்பொருள் பாவித்தால் 1 வருடத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை!

போதைப்பொருள் பயன்படுத்தியவர்களுக்கு ஒரு வருடத்திற்கு கனரக வாகன சாரதி உரிமம் வழங்கப்படாது என்று  அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார்.

ஜனவரி 1 முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருமென்றார். கனரக வாகன சாரதி விண்ணப்பதாரர்கள் போதைப்பொருள் பாவித்துள்ளார்களா என்பதை ஆராய சிறப்பு உயிரியல் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறினார்.

தனியார் பஸ் மற்றும் கனரக வாகன சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என்ற புகார்களையடுத்து இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here