மாகாணசபை தேர்தலை தீர்மானிக்க அரச கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று!

எதிர்வரும் மாகாண சபை தேர்தல் குறித்து ஆராய்வதற்காக, அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் இன்று (28) இடம்பெறவுள்ளது.

மாலை 6 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், மாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். பழைய முறைமையான விருப்பு வாக்குமுறையில் தெர்தலை நடத்தலாமென யோசனை சமர்ப்பித்திருந்தார்.

இருப்பினும், தேர்தலை உடனடியாக நடத்துவது தொடர்பாக அமைச்சரவையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. அதிகார பகிர்வு அலகான மாகாணசபை முறைமை குறித்து சரத் வீரசேகர போன்றவர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.

இதையடுத்து, இன்று கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறுகிறது. மாகாணசபை தேர்தல் குறித்து இதில் இறுதி முடிவு எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here