கடலில் மிதந்தது யாழ் பெண்ணின் சடலம்!

கொழும்பு, வௌ்ளவத்தை கடலில் சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (26) மதியமளவில் வெள்ளவத்தை கடலில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. சுவாமிநாதன் குசலா (41) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் முனைவர் பட்டத்திற்கான கற்கையில் ஈடுபட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் மரணத்திற்கான காரணம் தெரியாத போதும், அவர் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகே வரை சிறிய ரக மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்துள்ளதாகவும், அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடல் பகுதியை நோக்கி சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here