கேரளாவின் மிக இளைய பஞ்சாயத்து தலைவர்!

அண்மையில் கேரளாவில் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் இளைய வேட்பாளராக இருந்த சிபிஎம்மின் ரேஷ்மா மரியம் ராய், பதனமட்டிட்டா மாவட்டத்தில் அருவப்புளம் பஞ்சாயத்துத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பதவியேற்கும்போது,  மாநிலத்தின் இளைய பஞ்சாயத்து தலைவராக இருப்பார்.

வார்ட் 11 (ஒட்டுபாரா) இலிருந்து முந்தைய மூன்று தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்றிருந்த நிலையில், இந்த முறை சிபிஎம் சார்பில் ரேஷ்மா மரியம் ராய் வெற்றியீட்டியுள்ளார்.

தேர்தலில் போட்டியிட குறைந்த பட்சம் 21 வயதை பூர்த்தி செய்ய வேண்டும். நவம்பர் 18ஆம் திகதி வேட்புமனு தாக்கலின் கடைசி நாள். ரேஷ்மா மரியம் ராய் 17ஆம் திகதி 21 வயதை பூர்த்தி செய்தார்.

அதாவது, இரண்டு நாட்களின் முன்னர் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டிருந்தால், அவர் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியாது.

காங்கிரசின் சுஜாதா மோகனை தோற்கடித்து ரேஷ்மா வெற்றியீட்டினார். தன்மூலம், பல ஆண்டுகளுக்கு முன்பு சிபிஎம் இழந்த ஒரு இடத்தை மீண்டும் பெற்றார்.

பாரம்பரிய காங்கிரஸ் ஆதரவாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ரேஷ்மா, தனது மாணவ பருவத்தில் இடதுசாரி கொள்கையில் ஈர்க்கப்பட்டார்.

பதானம்திட்டாவில் உள்ள கொன்னியின் வி.என்.எஸ் கல்லூரியில் பிபிஏ பட்டம் பெற்ற உடனேயே இந்த இளைஞர் தேர்தல் களத்தில் நுழைந்தார். அவரது தந்தை ராய் பி மேத்யூ ஒரு மர வியாபாரி மற்றும் தாய் மினி ராய் ஒரு கல்லூரியில் பணிபுரிகிறார்.

சிபிஎம் கட்சியின் ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயதான வேட்பாளரும் வெற்றியீட்டி, திருவனந்தபுரம் நகர முதல்வராகியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here