தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் நாளை ஏற்படும் மாற்றம்!

நாட்டில் முடக்கப்பட்டிருந்த சில பகுதிகள் நாளை முதல் (28.12.2020) விடுவிக்கப்படவுள்ள அதேவேளை, சில பகுதிகள் முடக்கப்படவுள்ளன.

நாளை காலை 5 மணியுடன் டாம் வீதி, வாழைத்தோட்டம், மருதானை ஆகிய பொலிஸ் அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.

மேலும், கொம்பனித்தெருவில் வேகந்த மற்றும் ஹுனுபிட்டிய கிராமசேவகர் பிாிவு, வெள்ளவத்தை-மயூரா வீதி, பொரளை – ஹல்கஹவத்த மற்றும் காளிபுள்வத்த, வெல்லம்பிட்டி லக்சந்த செவன வீடமைப்புத் திட்டம் ஆகிய பகுதிகளும் நாளை காலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுமென அவர் தொிவித்துள்ளார்.

அதேவேளை, வாழைத்தோட்டம்-புதுக்கடை மேற்கு மற்றும் புதுக்கடை கிழக்கு கிராம சேவகர் பிாிவுகள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here