முன்னாள் WWE  நட்சத்திரம் பிராடி லீ மரணமானார்!

முன்னாள் WWE  நட்சத்திரம் பிராடி லீ நேற்று (26) சனிக்கிழமை 41வது வயதில் காலமானார்.

அமெரிக்காவின் புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள மாயோ கிளினிக்கில் கோவிட் அல்லாத நுரையீரல் பிரச்சினை காரணமாக அவர் உயிரிழந்தார்.

ஜொனாதன் ஹூபர் என்ற பெயரைக் கொண்ட அவர், ஓல் எலைட் மல்யுத்த போட்டிகளின் மூலம் மல்யுத்த வாழ்க்கையை தொடங்கினார். 2012 முதல் 2019 வரை WWE இல் மல்யுத்தம் செய்தபோது லூக் ஹார்ப்பர் என்ற பெயரில் களமிறங்கியிருந்தார்.

பின்னர் AEW இல் விளையாட ஆரம்பித்தவர், வெளியிடப்படாத மருத்துவ பிரச்சினை தொடர்பாக மல்யுத்தத்தில் இருந்து விடுப்பு எடுத்த பிறகு, நேற்று மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

சக மல்யுத்த நட்சத்திரம் அமண்டாவை அவர் திருமணம் செய்திருந்தார். அவர்களிற்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here