வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் “அழிக்கப்படும் சாட்சியங்கள்” ஆவண கையேடு நூல்வெளியீட்டு நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட “அழிக்கப்படும் சாட்சியங்கள்”எனும் ஆவண நூல் இன்று மாலை வெளியிட்டு வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் அரசியல் பிரமுகர்கள், வடக்கு கிழக்கு தழுவிய எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய காணாமல் ஆக்கப்பட்டோரின்உறவுகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
குறித்த நிகழ்வில் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஆகியோரின் சிறப்புரையும் இடம்பெற்றது.