வேலு நாச்சியாராக நயன்தாரா?

வரலாற்றில் இடம்பிடித்த ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் டிரெண்ட் இந்திய சினிமாவில் அதிகமாகி வருகிறது. ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கையை மணிகர்னிகா என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தனர். இதில் கங்கனா ரனாவத் நாயகியாக நடித்தார்.

அந்த வகையில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீராங்கனையான சிவகங்கை ராணி வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலு நாச்சியாரின் வீர வரலாற்று திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுசி கணேசன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். நயன்தாரா சம்மதித்த உடன் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here