225 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

நுவரெலியா – லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 225 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை இன்று (27.12.2020) மேற்கொள்ளப்பட்டதாக, லிந்துலை பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதோடு, இதுவரை 50 பேர் இணங்காணப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, குறித்த பிரதேச சபை முடக்கம் செய்ததுடன், அதில் தொழில் புரிந்த 43ற்கும் மேற்பட்ட நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையும், இப்பிரதேசத்தில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த சுமார் 180 பேருக்கும் மொத்தமாக 225 பேருக்கு இன்று (27) லிந்துலை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் எஸ். புஸ்பகாந்தன் தலைமையில் பரிசோதனை லிந்துலை சுகாதார காரியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது.

க.கிஷாந்தன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here